புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (16:54 IST)

லாட்டரியில் கிடைத்த 6.6 கோடியை ஏழைகளுக்கு பிரித்து கொடுத்த பெண்!

லாட்டரியில் கிடைத்த 6.6 கோடியை ஏழைகளுக்கு பிரித்து கொடுத்த பெண்!
லாட்டரியில் கிடைத்த ரூபாய் 6.6 கோடியை உறவினர்கள் நண்பர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு பிரித்துக் கொடுத்த பெண் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
லாட்டரி சீட்டில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்தால் தன்னுடைய குடும்பத்தினருக்கு செலவு செய்யும் பலரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தன்னிடம் இருக்கும் பணமே போதும் என்றும் இவ்வளவு பணத்தை வைத்து நான் என்ன செய்வது? என்றும் 6.6 கோடி ரூபாய் பரிசு கிடைத்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து தனக்கு லாட்டரியில் கிடைத்த அனைத்து ரூபாயையும் தன்னுடைய குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அவர் பிரித்துக் கொடுத்து உள்ளார். ஒரு ரூபாயைக் கூட லாட்டரி பணத்திலிருந்து எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த பெண் செய்தியாளர்களிடம் பேசியபோது எனது வங்கி கணக்கில் போதுமான அளவு பணம் உள்ளது. அந்த பணமே எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் போதும். இவ்வளவு பெரிய தொகையை நான் ஒருவர் மட்டுமே வைத்து அனுபவிப்பது சரியாக தோன்றவில்லை. எனவே தான் அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தேன் என்று கூறியுள்ளார். அந்த மனசு தான் கடவுள் என்று அந்த பெண்ணை அனைவரும் பாராட்டி வருகின்றனர்