சுட்டுக் கொல்லப்பட்ட 5000 ஒட்டகங்கள்: ஆஸ்திரேலியாவில் பஞ்சம்!
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் 5000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் காட்டு தீ மேலும் சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. காட்டுத்தீயால் பல விலங்குகள், பறவைகள் அழிந்துள்ளன. மக்கள் பலர் காட்டுத்தீயால் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபேரல் வகை ஒட்டகங்கள் ஏராளமான தண்ணீரை குடிப்பதால் தண்ணீர் பஞ்சம் மேலும் அதிகரிக்காமல் இருக்கு ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள், விலங்குகள் ஆர்வலர்கள் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.