புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 22 ஆகஸ்ட் 2018 (22:27 IST)

300 அடி உயரத்தில் இருந்த பாலம் இடிந்து விழுந்து 35 பேர் பலி

இத்தாலி நாட்டில் 300 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த பழமையான பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் விழுந்து சுமார் 35 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இத்தாலியில் கடந்த 1960ஆம் ஆண்டு கட்டப்பட்ட மொராண்டி என்ற பாலம் போக்குவரத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு அந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் பிசியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென பாலத்தின் நடுவில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
 
இதனால் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் 300 அடியில் இருந்து கீழே விழுந்தன. இந்த விபத்தில் முதல்கட்டமாக 35 பேர் பலியாகியுள்ளதாகவும் இடிபாடுகள் அகற்றிய பின்னரே பலி எண்ணிக்கை குறித்த சரியான தகவல் தெரியவரும் என கூறப்படுகிறது