வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (12:01 IST)

பெங்களூரில் நடந்த வினோத விபத்து: காயமின்றி உயிர் தப்பிய பிஞ்சுக்குழந்தை

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இருசக்கர வாகன விபத்து ஒன்றில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் படுகாயம் அடைந்த நிலையில் அதே இருசக்கர வாகனத்தில் சென்ற குழந்தை ஒன்று எவ்வித சிறுகாயமும் இன்றி தப்பித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று காலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற ஒரு இருசக்கர வாகனத்துடன் அவர்கள் சென்ற பைக் மோதியது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
 
ஆனால் இருசக்கர வாகனம் டிரைவர் இன்றி குழந்தையுடன் சுமார் 300 மீட்டர் பயணம் செய்து பின்னர் சாலையின் பக்கவாட்டு சுவரில் மோதியது. இதில் அந்த வாகனத்தில் இருந்த குழந்தை அருகில் இருந்த புல்தரையில் தூக்கி வீசப்பட்டதால் அந்த குழந்தைக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த ஆச்சரியமான சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.