Daily Horoscope
✕

விண்வெளிக்கு சென்று வந்த முதல் அமெரிக்க வீரர் மரணம்!

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 5 ஜனவரி 2023 (08:42 IST)
அமெரிக்க விண்வெளி ஆய்வு வரலாற்றில் முதன்முதலாக விண்வெளிக்கு சென்று வந்த வீரர் வால்டர் கன்னிங்ஹாம் காலமானார்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1960களில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் அப்பல்லோ திட்டத்தை தொடங்கியது. படிப்படியாக அதில் பல ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில் அப்பல்லோ 7 விண்கலம் மூலமாக 3 விண்வெளி வீரர்கள் முதல்முறையாக விண்வெளிக்கு பயணித்தனர்.

அப்பல்லோ 7 விண்கலத்தில் டான்.எப்.ஐசெல், வால்டர் எம் ஷிரா, வால்டர் கன்னிங்ஹாம் ஆகியோர் விண்வெளிக்கு பயணித்து 11 நாட்கள் விண்வெளியில் சுற்றி வந்து பின்னர் பத்திரமாக தரையிரங்கினர். மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் இந்த பயணம் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

இந்த விண்வெளி பயணத்தில் பங்கேற்ற இருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில் வால்டர் கன்னிங்ஹாம் தனது 90வது வயதில் தற்போது காலமானார். அவருக்கு விஞ்ஞானிகளும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Edit by Prasanth.K
 

எல்லாம் காட்டு

நடக்குற பார்த்த போக்கிரி காமெடிதான் ஞாபகத்துக்கு வருது - பழனிச்சாமி நக்கல்

நீங்க கரூர்ல நில்லுங்க தலைவரே... நாமதான் ஜெயிக்கிறோம்! - ஸ்டாலினிடம் சொன்ன செந்தில் பாலாஜி

மகளிர் உரிமை தொகை ரூ.2500 எப்போது? - அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த அப்டேட்

வங்கி கணக்கு.. பணப்பரிமாற்றங்கள்.. அன்பில் மகேஷ் தப்பவே முடியாது..

கோவை சிறையிலிருந்து தப்பி சென்ற கைதி - இதுக்கு ஒரு எண்டே இல்லயா சார்!..

அடுத்த கட்டுரையில்
Show comments