’வணக்கம்டா மாப்ள.. வானத்துல இருந்து..!’ – ஆர்டெமிஸ் 1 எடுத்த பூமியின் வீடியோ!
நாசா நிலவுக்கு அனுப்பியுள்ள ஆர்டெமிஸ் 1 விண்கலத்திலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் ராக்கெட் ஆர்டெமிஸ் 1 கடந்த இரண்டு முறை புறப்பட இருந்த கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஆர்டெமிஸ் திட்டத்தின் முதல் விண்கலமான இது மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முன்னதாக சோதனை செய்வதற்காக நிலவுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து வெளியேறி வரும் ஆர்டெமிஸ் 1 விண்கலத்தில் உள்ள கேமரா பூமியிலிருந்து தொலைவாக நகர்ந்து செல்வதை படம்பிடித்து அனுப்பியுள்ளது.
இந்த வீடியோவை நாசா தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள நிலையில் பலரும் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
Edited By Prasanth.K