வியாழன், 7 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (08:31 IST)

வெற்றியடையுமா நிலவு பயணம்? இன்று புறப்படுகிறது ஆர்டெமிஸ் 1

Artemis-1
நாசாவின் நிலவு பயண திட்டமான ஆர்டெமிஸ் திட்டத்தின் முதல் விண்கலம் பல்வேறு இடர்பாடுகளை தாண்டி இன்று புறப்பட உள்ளது.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் ராக்கெட் ஆர்டெமிஸ் 1 கடந்த 29ம் தேதி ஏவ இருந்த நிலையில் எஞ்சின் கோளாறு காரணமாக ஏவுதல் நிறுத்தப்பட்டது.

பின்னர் செப்டம்பர் 3ம் தேதி விண்கலம் புறப்படும் என அறிவிக்கப்பட்டு கவுண்டவுன் தொடங்கப்பட்ட நிலையில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.
தற்போது பிரச்சினைகள் முழுவதுமாக சரிசெய்யப்பட்டு மூன்றாவது முயற்சியாக விண்ணில் ஏவ தயாராக உள்ளது ஆர்டெமிஸ் ஒன். இன்று காலை 11.30 மணியளவில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முன்னதாக சோதனை செய்வதற்காக இந்த விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படுகிறது.

Edit By Prasanth.K