பாலைவனத்தை வெள்ளக்காடாக்கிய கனமழை! – ஆச்சர்யத்தில் அரபு மக்கள்!
அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவது அந்நாட்டு மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
வளைகுடா நாடுகளில் மழை பெய்வது என்பதே அரிதான ஒன்று. பெரும்பாலும் பாலைவன பிரதேசமான அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் அதிர்ஷ்டவசமாக எப்போதாவது சிறிய அளவில் மழை பொழிவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்ப்பிற்கு மாறாக நல்ல மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே அமீரகத்தில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் பல ஆண்டுகள் கழித்து முழுவதுமாக நிரம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சில நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதால் அணைகளில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீண்ட காலம் கழித்து அமீரகத்தில் நல்ல மழை பெய்துள்ளது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.