செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (17:29 IST)

இந்தியாவிடம் மேலும் ரூ. 7.600 கோடி கேட்கும் இலங்கை !

நமது அண்டை நாடான இலங்கையில் பிரதமராக ராஜபக்சே ஆட்சி செய்து வரும் நிலையில் அங்கு  பொருளாதார நெருக்கடியில் திக்குமுக்காடி வருகிறது.

சுற்றுலாத்துறையைப் பெரிதும் நம்பியிருந்த  இலங்கையில், கொரொனாவால் 905 பாதிப்பு ஏற்பட்டது.  அன்னிய செலாவணி பற்றாக்குறை நிலவிவருகிறது. இதனால் இறக்குவதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது .

இதனால்     அத்தியாசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.  ஒருகோப்பை தேனீர்.ரூ.100க்கும், ஒரு கிலோ அரிசி ரு.450 க்கும், ஒரு லிட்டர் பால் ரூ.75 க்கும், ஒரு ஒரு முட்டை ரூ.32  க்கும், ஆப்பிள் ஒன்றின் விலை ரூ     .150  க்கும்,  பேரீட்சை ஒரு கிலோ ரூ .900க்க்கும் பெட்ரோல்  லிட்டர் ரூ.260 க்கும்  விற்கப்படுகிறது.

சமீபத்தில், டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் ரூ.260ஆக சரிந்துள்ளது, இதனால் பொருட்கள்  விலை மேலும் அதிகரிக்கும் அபாயமுள்ளது. இலங்கை  நிதி அமைச்சர்,பசில் ராஜபக்சே இந்தியா வது கடனுதவி ஒப்பந்தம் தொடர்பாக பேசினார்.                குறிப்பாக சீனா, இந்திய பன்னாட்டு நிதியம் போன்றவற்றிடம் இருந்து கடன் பெற்று தற்போதை நிலையைச் சரிக்கட்ட முயல்வதாக தகவல் வெளியானது.

முதல்கட்டமாக இந்திய அரசு, இலங்கைக்கு ரூ,7500 கோடி நிதி உதவி செய்துள்ளது.

இந்நிலையில், இலங்கை சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரு நாடுகள் உறவுகள் குறித்து, அண்டை நாடடுகளான  நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள பிம்ஸ்டெக் உச்சி மா  நாட்டில் கலந்ததுகொள்ளவும்  இலங்கை சென்றுள்ளார்.

அதிபர் பசில் ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை  சந்தித்துப் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர்,  இலங்கை அதிபருடனான சந்திப்பின்போது, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர இலங்கைக்கு இந்தியா உதவும் என உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவிடம் மேலும் ரூ.7600 கோடி இலங்கை உதவி கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.