செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (15:12 IST)

இந்தியா தாண்டியும் செல்லும் மாநாடு… சிம்பு ரசிகர்களுக்கு செம்ம நியூஸ்!

சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

மாநாடு படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்து ஒரு மாமாங்கம் ஆகிறது. அதே போல இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் லாபமாக அடுத்த படங்களில் சம்பளம் கணிசமாக ஏறியுள்ளது. திரையரங்கு வருவாய் மூலமாக மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் சிம்பு படமாக அமைந்துள்ளது.

இதையடுத்து இந்த படத்தின் இந்திய மொழிகளுக்கான ரீமேக் தொகை மிகப்பெரிய விலைக்கு விற்பனை ஆகியுள்ளது. இப்படி பல சாதனைகளைப் படைத்துள்ள மாநாடு திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளதாம். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்ட நிலையில் 6 மாதத்துக்குப் பிறகு சீனாவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே அமீர்கானின் பி கே, சிவகார்த்திகேயன் தயாரித்த கனா ஆகிய படங்கள் சீனாவில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.