அமெரிக்க நீதிபதியாகும் இந்திய பெண்: அதிபர் ட்ரம்ப் தேர்வு செய்தார்
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்திற்கு நீதிபதியாக இந்திய பெண் ஒருவரை தேர்வு செய்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தவர் ஷெரின் மேத்யூஸ். தற்போது சாண்டியாகோவில் உள்ள சட்ட நிறுவனத்தில் உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பிராந்திய நீதிமன்றத்திற்கு நீதிபதியாக ஷெரினை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேர்வு செய்துள்ளார். அமெரிக்க செனட் சபை இதற்கு ஒப்புதல் வழங்கிய பிறகு ஷெரின் தெற்கு மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்பார்.
இதன்மூலம் கலிபோர்னியாவின் முதல் இந்திய-அமெரிக்க நீதிபதி என்னும் சாதனையை ஷெரின் மேத்யூஸ் பெறப்போகிறார். அமெரிக்க அரசியல் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.