காரை முட்டி தூக்கிய காண்டாமிருகம் – வைரலான வீடியோ
ஜெர்மனியில் உள்ள விலங்குகள் பூங்கா ஒன்றில் காண்டாமிருகம் ஒன்று காரை முட்டி மோதி நொறுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஜெர்மனியில் உள்ள விலங்குகள் பூங்காவிற்கு 18 மாதங்களுக்கு முன்பு குஷினி என்ற காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டுள்ளது. 30 வயதான இந்த காண்டாமிருகம் இனப்பெருக்கத்திற்காக இந்த பூங்காவில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அன்று பூங்காவில் விலங்குகளை பராமரிக்கும் பெண் ஒருவர் காரில் விலங்குகள் நடமாடும் பகுதியில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது காருக்கு பக்கவாட்டிலிருந்து திடீரென தோன்றிய காண்டாமிருகம் காரை முட்டி கவிழ்த்தது. இதனை தூரத்திலிருந்து கண்ட பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து அந்த காண்டாமிருகம் காரை முட்டி மோதி நொறுக்கி கொண்டே இருந்தது. அந்த சம்பவத்தை பார்வையாளர் ஒருவர் தனது போனில் வீடியோ எடுத்திருக்கிறார்.
காண்டாமிருகம் தாக்கியதில் கார் பலத்த சேதம் அடைந்தது. காருக்குள் சிக்கிய அந்த பெண் பயங்கரமான காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.