திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2016 (12:30 IST)

உடல் வெப்பத்தை மின்சாரமாக்கும் நவீன டி-சர்ட்

உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டி-சர்ட்டை அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

 
அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழக நிபுணர்கள், உடல் வெப்பத்தை மின்சாரமாக்கும் அதி நவீன டி-சர்ட்டுகளை தயாரித்துள்ளனர். 
 
இவை மின்சாரத்தை எடுத்துக் செல்லும் வகையில் மிக குறைந்த எடையுடன் கூடிய மூலப்பொருட்களால் தயாரிக்கபட்டுள்ளது.
 
இந்த டி.சர்ட் அணியும் போது உடலில் இருக்கும் வெப்பம் அதில் உள்ள மூலப்பொருட்களால் மின்சாரமாக மாறும், அதன் மூலம் மிக சிறிய அளவிலான எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளை இயக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
‘டி சர்ட்டில்’ ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவில் 20 மைக்ரோ வாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.