திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (22:39 IST)

24 இந்திய சிப்பாய்களுடன் சென்ற அமெரிக்க எண்ணெய்க் கப்பல் சிறைப்பிடிப்பு!

ship
ஓமன்  நாட்டில் 24 இந்திய சிப்பாய்களுடன் சென்ற அமெரிக்க எண்ணெய்க் கப்பலை ஈரான் கடற்படை சிறைப்பிடித்துள்ளது.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த எண்ணெய்க் கப்பல் குவைத்தில் இருந்து ஹூஸ்டன்  நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பலின் 24 இந்திய சிப்பந்திகள் உள்ளிட்ட ஊழியர்கள் பலர் இருந்தனர்.

இந்தக் கப்பல் ஓமன் தலைநகர் மஸ்கர் அருகேயுள்ள கடற்பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஈரான் கடற்படை வீரர்கள் அமெரிக்க எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்தனர்.

ஈரான் பகுதிக்குல் எல்லை மீறி நுழைந்ததாகக் கூறி இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இதேபோல் கடந்த 2 ஆண்டுகளில்   கப்பல்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.