திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (19:15 IST)

நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது துப்பாக்கிச் சூடு!

delhi
டெல்லியில் சாகேத் பகுதி நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி யூனியனில் சாகெத் என்ற  நீதிமன்ற வளாகத்தில் இன்று விசாரணைக்கு வந்த பெண் மீது ஒரு  நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினார்.

உடனே அருகிலுள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்பட்டுள்ள நபர் ராஜேந்திர ஜா முன்பு பார் கவுன்சிலால் தடை செயப்ப்பட்டவர் ஆவார். இவர், வழக்கறிஞர் உடையணிந்து வந்து  நீதிமன்றத்திற்குள் நுழைந்து இத்தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பெண் மீது தாக்குதல் நடத்தியவர் பெண்ணின் கணவர் எனவும், சட்டத்துறையினரின் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டடுள்ளது.