பாகிஸ்தான் மீது நடவடிக்கை: அமெரிக்கா எச்சரிக்கை!!
பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்து கொண்டிருந்தால் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.
தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்தியாவும் வலியுறுத்தியது.
தற்போது, பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்கா எச்சரித்து உள்ளது.
பாகிஸ்தான் மீது அமெரிக்கா தன்னுடைய நோக்கத்தை மாற்று வழியில் அடைய கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட வேண்டாம் என நேரடியாக எச்சரித்துள்ளனர்.