அமெரிக்காவிடம் இருந்து ஒதுங்கிக்கொள்ளுங்கள்: ஆஸ்திரேலியாவிற்கு வடகொரியா பகிரங்க மிரட்டல்!!
அமெரிக்காவிடமிருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு ஆஸ்திரேலியாவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது வடகொரியா.
ஆஸ்திரேலிய அரசிற்கு வடகொரியாவிடமிருந்து ஒரு பக்க அளவு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் டிரம்பிடமிருந்து ஒதுங்கி இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் கூறியதாவது, அமெரிக்க அதிபர் டிரம்பின் கொடூரமான மற்றும் பொறுப்பற்ற நகர்வுகளிருந்து ஆஸ்திரேயாவை விலகி இருக்குமாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் வடகொரியாதான் ஜப்பான், தென் கொரியா, அமெரிக்காவில் அணு ஆயுத ஏவுகணை செலுத்துவோம் என்று பயத்தை உருவாக்கி ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.