வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (17:03 IST)

ஸ்பெஷல் சலுகைகள் கட்: இந்தியாவை பழி தீர்க்கும் அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு வர்த்தக சலுகைகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. அதாவது, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100% வரை வரி விதிப்பதாகவும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி எதுவும் விதிக்கப்படுவது இல்லை.
 
இது குறித்து டிரம்ப் கூறியதாவது, ஒரு பொருளுக்கு நாம் வரி எதுவும் வசூலிக்காதபோது, எந்த நாடும் அதே பொருளுக்கு 100% வரி வசூலிப்பதை அமெரிக்கா இனி அனுமதிக்காது. இனி அமெரிக்காவும் வரி வசூலிக்கும் என தெரிவித்தார். 
 
அதோடு, இந்தியாவுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு வர்த்தக நாடு அந்தஸ்து ரத்து செய்ய டிரம்ப் முடிவு செய்துள்ளாராம். அதேபோல், துருக்கிக்கு வழங்கப்பட்டு இருந்த வர்த்தக சலுகையையும் அமெரிக்கா ரத்து செய்ய உள்ளதாம்.