காபூலில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 3000 பேரை மீட்ட அமெரிக்கா
காபூலில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 350 அமெரிக்கர்கள் உட்பட 3,000 பேரை அமெரிக்கா மீட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தாலிபான்கள் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம், ஆப்கன் நாட்டை தாலிபான்கள் ஆக்கிரமித்து தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில் அந்நாட்டில் இருந்து ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர்.
இதனால் காபூல் விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டிருப்பதை அடுத்து, அமெரிக்க ராணுவ வீரர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காபூலில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 350 அமெரிக்கர்கள் உட்பட 3,000 பேரை அமெரிக்கா மீட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் இதுவரை 9,000 பேரை அமெரிக்கா மீட்டிருக்கிறது. ஜூலை இறுதி வாரத்தில் இருந்து தற்போது வரை 14,000 பேரை மீட்டுள்ளதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.