வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (14:01 IST)

காபூல் விமான நிலைய மரணங்கள் - எண்ணிக்கை எவ்வளவு?

காபூல் விமான நிலையம் மற்றும் அதனைக் சுற்றியுள்ள பகுதிகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தாலிபன் அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் பிடித்ததை அடுத்து அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர் என்பதும் சமீபத்தில் விமானத்தைப் பிடிப்பதற்காக விமானத்தின் படிக்கட்டுகளிலும் சக்கரங்களிலும் தொங்கிக் கொண்டிருந்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானத்தின் சக்கரங்களில் மனித உடல்கள் மற்றும் மனித உடலின் பாகங்கள் இருந்ததாக மற்றும் விமானப்படை தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் காபூல் விமான நிலையம் மற்றும் அதனைக் சுற்றியுள்ள பகுதிகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தாலிபன் அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பெயர் வெளியிடாமல் பேசிய அவர் இந்த மரணங்களுக்கு காரணம் துப்பாக்கிச் சூடு அல்லது கூட்ட நெரிசல் என்று அவர் கூறினார். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைப்பவர்களால் காபூல் விமான நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல் உண்டாகியுள்ளது.