1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 28 டிசம்பர் 2022 (19:54 IST)

பெண் கல்விக்கு தடை: பட்டப்படிப்பு சான்றிதழ்களை கிழித்து எறிந்த ஆப்கன் பேராசிரியர்

Afghan
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் கல்லூரிகளில் சென்று கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் பேராசிரியர் ஒருவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் பெற்ற டிகிரி சர்டிபிகேட்டை கிழித்து எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி தொடங்கியதிலிருந்தே பெண்களுக்கு எதிரான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன என்பதும் சமீபத்தில் பெண்கள் பல்கலைக்கழகம் சென்று கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான தொடர்ச்சியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் பேராசிரியர் ஒருவர் தொலைக்காட்சி நேரலையில் தான் வாங்கிய டிகிரி பட்டத்தை கிழித்து எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நாட்டில் பெண்களுக்கு கல்வி கற்க உரிமையில்லை என்றால் என்னுடைய இந்த சான்றிதழ் தேவையில்லை என்றும் அவர் அந்த தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார் 
 
Edited by Siva