செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (18:19 IST)

ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்ட டி.ஆர்.பி!

புலம்பும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்
தமிழகத்தில் உதவிப் பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான அட்டவணையை இன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, வரும் 2023 ஆம் ஆண்டு 15,14 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதில், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 2023- ஏப்ரல் மாதம் தேர்வு நடக்கும் எனவும், இடை நிலை எனப்படும் செகண்ட் கிரேட் ஆசிரியர்களுக்கான 6553 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு மே மாதம்  நடக்கும் எனவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3587 பணியிடங்களுக்கான தேர்வு ஜூனின் நடக்கும் எனவும், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 , 2-  2024 ஆம் ஆண்டு ஜனவரியில் நடக்கும் எனத் தெரிவித்துள்ளது.