வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (22:08 IST)

பெண்கள் படிக்கத் தடை: ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக போராட்டம்

Afghanistan
ஆப்கானிஸ்தான்  நாட்டில் பெண்கள் படிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஃப்கானிஸ்தானில் கடந்த 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க படைகள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட்டதால், ஆப்கானிஸ்தான் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றினர்.

இந்த நிலையில், பழமைவாதிகளாக தாலிபான் கள் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். அதன்படி, பொழுதுபோக்கு பூங்கா, ஆண்கள் துணையின்றி விமானங்களில் செல்ல பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொது இடங்களில் தலை முதல் கால்வரை பெண்கள் மூடியடி செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்,  ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தாலிபான்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளனர்.

இது பெண்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெண்கள் படிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு  எதிராக  அங்குள்ள அங்கர்ஹார், காந்தஹார் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் கையில் பதாகைகள் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.