தப்பிக்க விமானம் இல்ல; வேற வழி இல்ல! – பாகிஸ்தானிடம் அடைக்கலம் கேட்கும் ஆப்கன் அகதிகள்!
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கன் மக்கள் பலர் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் பாதுகாப்பு கருத்தி அந்நாட்டில் உள்ள பிறநாட்டு மக்களும், சொந்த நாட்டு மக்களுமே அவசர அவசரமாக ஆப்கனை விட்டு தப்பி சென்று வருகின்றனர்.
இதனால் சமீபத்தில் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் படையெடுத்ததால் விமான சேவையை தலீபான்கள் நிறுத்தி வைத்தனர். பலர் விமானத்தில் தொங்கி கொண்டாவது சென்றுவிடலாம் என முயன்று பலியான சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விமானம் மூலமாக தப்ப முடியாத நிலையில் ஆப்கானிஸ்தான் மக்கள் பலர் கால்நடையாகவே பாகிஸ்தான் எல்லையை கடக்க முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் பாகிஸ்தானில் அடைக்கலம் கேட்டு வருவதாக கூறப்படும் நிலையில் ஆப்கன் அகதிகள் பல்வேறு நாடுகளுக்கும் அடைக்கலம் கேட்டு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.