1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (13:08 IST)

இந்தியாவுக்கு திரும்பி போ.. சென்னை வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண் எம்பிக்கு மிரட்டல்!

இந்தியாவுக்கு திரும்பி போ.. சென்னை வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண் எம்பிக்கு மிரட்டல்!
சென்னை வம்சாவளி பெண் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் எம்பியாக இருந்து வரும் நிலையில் இந்தியாவுக்குத் திரும்பி போ என அமெரிக்காவில் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் எம்பியாக இருப்பவர் பிரமிளா ஜெயபால். 56 வயதான இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது அவருக்கு இந்தியாவுக்கு திரும்பி போ என மிரட்டல்கள் வருவதாகவும் ஆடியோவாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த மிரட்டல்களை அவர் நேற்று வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அவருக்கு வந்த மிரட்டல்கள் ஆபாச வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன என்பதும் இந்தியாவுக்கு திரும்பி செல்லாவிட்டால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இதுகுறித்து பிரமிளா தனது டுவிட்டரில் பொதுவாக அரசியல்வாதிகளுக்கு இது மாதிரி மிரட்டல்கள் வருவது சகஜம்தான் என்றாலும் ஆனால் இதுபோன்ற வன்முறையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இந்த அணுகு முறைக்கு அடித்தளமாக இருக்கிற இனவெறி பாலின வெறியை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்