வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (16:44 IST)

பர்ஸை திருடிய திருடனின் பைக்கை அபேஸ் செய்த பெண்..வைரல் வீடியோ

பர்ஸை திருடிய திருடனின் ஸ்கூட்டியை, அந்த பெண்ணே திருடிச் செல்வது போல் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு பெண் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஒரு திருடன் ஸ்கூட்டியில் வந்து இறங்கி அந்த பெண்ணின் ஹேண்ட் பர்ஸை திருட முற்படுகிறான். ஒரு கட்டத்தில் அந்த பெண், அந்த பர்ஸை தூக்கி தூரத்தில் எரிகிறார். அந்த திருடன் உடனே பர்ஸை எடுக்க ஓட, அந்த பெண் அந்த திருடனின் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு போய்விடுகிறார்.

இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன. ஆனால் இந்த சம்பவங்கள் அனைத்தும் சுவாரஸியத்திற்காக திட்டமிட்டு எடுக்கப்பட்டது எனவும், இதே போன்று பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உலாவுகிறது என்றும் இணையதளவாசிகள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.