மேடையில் கணவருக்கு சர்ப்ரைஸ் கிஸ் கொடுத்த ப்ரியங்கா சோப்ரா - வைரல் வீடியோ!

Papiksha| Last Updated: புதன், 18 செப்டம்பர் 2019 (15:16 IST)
உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.


 
இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பிரியங்கா சோப்ரா நடித்துள்ள  The Sky Is Pink படத்தை அண்மையில் டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிட்டனர். அப்போது ப்ரியங்காவிடம் எப்போது குழந்தை பெற்றுக்கொள்வீர்கள் என கேட்டதற்கு "நிச்சயமாக கடவுள் எங்களை ஆசிர்வதித்தால்’ என்று கூறிய அவர், வீடு ஒன்றை வாங்கவேண்டும் அடுத்தது ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் இது இரண்டும் தற்போது செய்யவேண்டிய பட்டியலில் இருக்கிறது என கூறியிருந்தார். 
 
இந்நிலையில் கடந்த 16ம் தேதி தனது கணவர் நிக்ஜோன்ஸ் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது இசை நிகழ்ச்சி ஒன்றில் நிக் ஜோன்ஸின் பாடலை ரசிகர்கள் மெய்மறந்து ரசித்து கொண்டிருந்தனர். ஆனால், நிக் அப்போது மனைவி ப்ரியாவை சுத்தி முத்தி தேடி அவரது  கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது. உடனே திடீரென கையில் சிவப்பு ரோஜாவுடன் பிரியங்கா அங்கு தோன்ற பிரியங்காவை நோக்கி நடந்து வந்து , கீழே குனிந்து, இருவரும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினர். பின்னர் ரசிகர்களின் சத்தத்தால் அந்த அரங்கமே அதிர்ந்தது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 இதில் மேலும் படிக்கவும் :