1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 மே 2023 (22:08 IST)

இத்தாலியில் திடீரென்று கார் வெடித்து விபத்து....

mariyamman temple
இத்தாலி நாட்டில்  பிரதமர் ஜார்ஜியா மெலோனி  தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள மக்கள் அதிக  நடமாட்டமுள்ள மிலன் நகரில் இன்று  கார் திடீரென்று குண்டுவெடித்தது போன்று சத்தத்துடன் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.  இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாலையோரத்தில்  நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேன் திடீரென்று அதிக சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தது. அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகங்களும் இதில் தீப்பற்றி எரிந்தன.

இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர்  தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.

வேன் எப்படி வெடித்தது? என்று போலீஸார் விசாரித்து வருகிறது,. வேன் எரியும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.