1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 6 மே 2023 (21:12 IST)

உக்ரைனில் 10 ஆயிரம் பேருக்கு டிரோன் ஆபரெட்டர் பயிற்சி

Ukraine
உக்ரைனில்  முதற்கட்டமாக 10 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு  டிரோன் ஆபரெட்டர் பயிற்சி வழங்க  அரசு  முடிவெடுத்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான போர் 1 ஆண்டிற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளுடன் நேட்டோ கூட்டமைப்பும் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

இதனால், பலமான ரஷியாவை, உக்ரைனும் தாக்கி வருகிறது. இந்த இலையில்,  உக்ரைன் ராணுவத்தைப் பலப்படுத்த கடந்த ஜூலை மமதம் டிரோன்களின் ராணுவம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யவுள்ளதாக அரசு திட்டமிட்டது.

இதற்காக, உக்ரைனில்  முதற்கட்டமாக 10 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு  டிரோன் ஆபரெட்டர் பயிற்சி வழங்க முடிவெடுத்துள்ளது. இவர்களுக்கு ரஷிய  ஏவுகணைகளை முறியடிக்கும் அவர்களின் டிரோன்களைத் தகர்க்கவும் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறப்படுகிற்து.

மேலும், இத்திட்டத்திற்காக சுமார் ரூ.2 ஆயிரம் கோடி நிதி திரட்டியுள்ளதாகவும், அடுத்து இன்னும் 10 ஆயிரம் டிரோன் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.