திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 3 மே 2023 (22:27 IST)

சூடானில் 7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம்

sudan
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளதை அடுத்து அங்குள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்,

ஏற்கனவே மக்கள் 500 பேர் உயிரிழந்த நிலையில், சூடானில்  சண்டையை நிறுத்தும்படி ஐநா அமைப்பு மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த  நிலையில், அங்குள்ள வெளி நாட்டினரை மீட்பதற்காக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் போர் நிறுத்தத்தை மீறி சண்டைகள் நடைபெற்றது, இதற்கிடையே பேச்சுவார்த்தைக்கு, ராணுவ தளபதி மற்றும் துணை ராணுவ தளபதி  ஒப்புக்கொண்டனர்.

இதனால், மேலும், 7 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை மே 4 முதல் மே 11 ஆம் தேதி வரை போர் நிறுத்தம் அமலிலிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.