செல்பி மோகம்: தனியா தெரியனும்ன்னு தனியாவே போய்சேர்ந்த மாடல் அழகி
செல்பி மோகத்தால் மாடல் அழகி ஒருவர் மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பி எடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிரித்த வண்ணம் உள்ளது.
தைவான் நாட்டை சேர்ந்தவர் கிகி வூ. மாடல் அழகியான இவர் எந்த விஷயத்திலும் மற்றவர்களை விட தனித்து தெரிய வேண்டும் என எண்ணம் கொண்டவர்.
இதனால் மலை உச்சிக்கோ அல்லது உயரமான இடங்களுக்கோ சென்று அங்கு பிகினி உடையில் செல்பி எடுத்து அந்த போட்டோவை இணையத்தில் பதிவிடுவார். இதனால் சமூக வலைதளத்தில் அவரை பின்தொடருவோரின் எண்ணிக்கை அதிகமானது. ரசிகர்கள் ஏராளமாக சேரவே கிகி பல்வேறு ஆபத்தான மலை உச்சிகளுக்கு சென்று அங்கு நீச்சல் உடையுடன் செல்பி எடுத்து பதிவிடுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார். கடைசியில் அந்த செல்பியே அவரை இந்த உலகை விட்டு செல்ல வைத்து விட்டது.
வழக்கம்போல் செல்பி எடுக்க ஒரு மலை உச்சிக்கு சென்றார் கிகி, அப்போது கால் இடறி 65 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக நண்பர்களுக்கு போன் செய்தார். ஆனால் அவர்கள் வருவதற்குள் கிகி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தைவான் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.