தாத்தாவின் சாம்பலில் பிஸ்கட் தயாரித்து நண்பர்களுக்கு கொடுத்த மாணவன்
கலிஃபோர்னியாவில் மாணவன் ஒருவன் இறந்த தாத்தாவின் சாம்பலில் பிஸ்கட் செய்து அதனை சக நண்பர்களுக்கு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவில் டேவிஸ் நகரை சேர்ந்த பள்ளி சிறுவனின் தாத்தா சமீபத்தில் இறந்து போனார். அவரது உடல் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில் அந்த சிறுவன் எரியூட்டப்பட்ட தனது தாத்தாவின் சாம்பலை எடுத்து அதை வைத்து பிஸ்கட்டை தயாரித்துள்ளான். அத்தோடு நிறுத்தாமல், அந்த பிஸ்கட்டை தனது நண்பர்களுக்கும் கொடுத்துள்ளான். பிஸ்கட்டை சாப்பிட்ட பல மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.