திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 செப்டம்பர் 2018 (15:42 IST)

13 வயதில் 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன்

13 வயதே ஆன சிறுவன் ஒருவன் 20 பெண்களை பாலியல் பாலத்காரம் செய்து துன்புறுத்தியது தற்போது அம்பளமாகியுள்ளது. அந்த சிறுவனம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான். 
 
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 13 வயது சிறுவன் 20 இளம் பெண்களுக்கு மேல் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் மற்றும் தாக்குதலில் ஈடுப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளான்.
 
சிறுவனை கைது செய்த போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறுவன் தனது 9 வயதில், அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரை மிகவும் மோசமாக பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்டதாகவும், அங்கு இருந்து தப்பித்து வந்ததாகவும் கூறியுள்ளான். 
 
சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து தப்பி வந்த பின்னரும் இது போன்ற செயல்கலீல் ஈடுப்பட்டு 20க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்து தற்போது மீண்டும் கையும் களவுமாக சிக்கியுள்ளான். அந்த சிறுவன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிகிறது.