கம்போடியாவில் ஓட்டலில் தீ விபத்து ! 26 பேர் பலி!
கம்போடியா நாட்டில் உள்ள கிராண்ட் டயமண்ட் சிட்டி ஹோட்டலில் இன்று தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு கம்போடியா. இங்குள்ள சிட்டி கேசினோ என்ற நட்சத்திர ஹோட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர்.
நேற்றிரவு 11:30 மணிக்கு ஒரு அறையில் இருந்து தீப் பற்றியது. இந்த தீ உடனே பக்கத்து அறைகளுக்கும் பரவியது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
இதில், 26 பேர் பலியானதாகவும், 57 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சசை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது