வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 28 அக்டோபர் 2022 (18:39 IST)

ஓட்டல் தொழிலில் களமிறங்கிய சூப்பர் ஸ்டார் !

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. இவரது ஒவ்வொரு படங்களும் தியேட்டரில் திருவிழா கோலம் பூணும். வசூலிலும் பெரும் சாதனை படைக்கும்.

இவர்  ஆந்திரவாவைச் சேர்ந்த பிரபல நடிகர் கிருஷ்ணாவின் மகனாக அறியப்பட்டாலும், சென்னையில்தான் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார்.

இவர் நடிப்பதோடு மட்டும் அல்லாமல், ஆடை  நிறுவனமும், தியேட்டர்களையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையி, தற்போது, தன் மனைவி  நம்ரதா பெயரில் அவர் ஓட்டல் தொழில் களமிறங்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகிறது.

அதன்படி, ஐதராபாத் நகரில்  பல வசதிகளுடன் 2 நட்சத்திர ஓட்டகள் கட்ட திட்டமிட்டுள்ள மகேஷ்பாபு,  மேலும், பஞ்சாரா ஹில்ஸ் என்ற பகுதியில் ஒரு ஹோட்டல் உருவாகவுள்ளது.  மேலும், இந்தியாவில் முக்கிய நகரங்களிலும் இந்த ஓட்டல்களை அவர்  நிறுவ உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் ''மகேஸ்பாபு28'' படம் அடுத்தாண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி  அன்று திரைக்கு வரும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.
 
Edited by Sinoj