திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 16 நவம்பர் 2021 (01:34 IST)

97% மக்கள் கடும் உணவுப் பஞ்சத்தில் பாதிப்பு! – ஐநா தகவல்

ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமார்  97% மக்கள் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சில மாதங்களுக்கு முன் அமெரிக்கப் படைகள் ஆப்கானை விட்டு வெளியேறிய நிலையில், தாலீபான்கள் ஆட்சியைக்க் கைப்பற்றினர்.

இந்நிலையில் அந்நாட்டில் அவ்வப்போது குண்டுவெடிப்பு,  கொலை, பெண்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமார் 97% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் பாதிக்கப்படுவர் எனவும்  87 லட்சம் பேர் உணவுப் பஞ்சத்தால் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் ஐநா வேதனை தெரிவித்துள்ளது.