1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2021 (07:23 IST)

இன்றைய உலக கொரோனா நிலவரம்: உருமாறிய கொரோனாவால் எண்ணிக்கை அதிகரிப்பா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 8.60 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 86,090,997 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,859,811
பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 61,038,927
பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 23,192,259 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,350,223  என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 362,095 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 12,729,855 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,357,569 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 149,886 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 9,975,340 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,754,560 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 196,591 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 6,875,230என்பதும் குறிப்பிடத்தக்கது.