செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 4 ஜனவரி 2021 (17:56 IST)

நாங்கள் என்ன ஜூவில் இருக்கும் மிருகங்களா? ஆஸ்திரேலியா மேல் கடுப்பான இந்திய கிரிக்கெட் வாரியம்!

இந்திய வீரர்கள் அனுமதியின்றி ஹோட்டல்களுக்கு சென்றது குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு பிசிசிஐ காரசாரமாக பதிலளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் ஜனவரி 7ஆம் தேதி 3-வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியினர் 5 பேர் பயோ பபுளில் இருந்து வெளியேறி கொரோனா விதிமுறைகளை மீறியுள்ளனர்.

 துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ரிஷப்பந்த், நவ்தீப் ஷைனி, சுப்மான் கில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர் அவர்களிடம் கைகுலுக்கி செல்பி எடுத்துள்ளார். மேலும் வீரர்களின் உணவுக்கு தானே பணமும் செலுத்தியுள்ளார். இது சம்மந்தமாக அவர் சமூகவலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து அந்த ஐந்து வீரர்களும் இப்போது தனிமைப் படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் எனவே முடிவுகள் வந்துள்ளன.

ஆனால் இந்திய வீரர்களின் இந்த செயல்கள் குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்களும் அரசு அதிகாரிகளும் கண்டிக்கும் விதமாக பேசி இருந்தனர். விதிகளை பின்பற்றும் படி இல்லாவிட்டால் இங்கே விளையாட வராதீர்கள் என கோபமாக பேசியிருந்தனர். இதற்கு இப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் கோபமாக பதிலளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பிசிசிஐ சார்பாக ‘எங்கள் வீரர்கள் ஒன்றும் மிருக காட்சி சாலையில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் விலங்குகள் இல்லை. ஆஸ்திரேலியாவில் பின்பற்றப்படும் விதிகளை மதித்தே அவர்கள் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்கள். ஆஸ்திரேலிய மக்கள் எல்லோரும் சந்தோஷமாக புத்தாண்டைக் கொண்டாடுவது போல எங்கள் வீரர்களும் கொண்டாடினார்கள். மூன்றாவது டெஸ்ட்டை பார்க்க 20,000 பேருக்கு மேல் அனுமதிக்கப்படும் நிலையில் அதன் மூலம் கொரோனா பரவாதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.