1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 27 மார்ச் 2023 (21:19 IST)

நாளை ஒரே வரிசையில் ... 5 கிரகங்கள் வானில் தோன்றும் அதிசயம்

5planets
தினமும் வானில், வெள்ளி, சந்திரன் ஆகிய கோள்களை மட்டுமே நாம் பார்த்து வருகிறோம். எப்போதாவது சனி, வியாழன் போன்றவை கண்களில் தட்டுப்படும்.

இந்த நிலையில், நாளை  ஒரே நாளில்  ஒரே வரிசையில் 5 கிரகங்கள் வானில் தோன்றவுள்ளது.

இதுகுறித்து நாசா விண்வெளி ஆய்வாளர் பில் குக், இந்த வாரம் குறிப்பாக செவ்வாய்க்கிழாய் அன்று செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் நிலவுக்கு அருகே ஓரே வரிசையில்தோன்றும். இதைக் காண விரும்புவோம், சூரியன் மாலை மறைந்த பின் வானத்தை உற்றுக் கவனிக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், அரைமணி நேரத்தில், வியாழனும், புதனும் மறைந்துவிடும் என்று கூறியுள்ள அவர்,  வெறும் கண்களால் பார்ப்பதைவிட பைனாகுலர் இருந்தால் இவற்றைக் காணமுடிவும் என்று கூறியுள்ளார்.

கடந்தாண்டு கோடை காலத்தில் இதேபோல் 5 கிரகங்கள் வரிசையாக தோன்றிய நிலையில் தற்போது மீண்டும் 5 கிரகங்கள் வரிசையாகத் தோன்றவுள்ளதால், விஞ்ஞானிகளும், மக்களும் இதைக் காண ஆவலுடன் உள்ளனர்.