1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2020 (07:09 IST)

உலக கொரோனா நிலவரம்: பாதிப்பு 4.37 கோடி, குணமானோர் 3.21 கோடி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 4.37 கோடியாக அதிகரித்துள்ளது.
 
உலகம் முழுவதும் 43,770,537 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,164,236 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 32,173,314 பேர்
மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 10,432,987 என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,962,783 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 231,045 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 5,833,824 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,945,888 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 119,535 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 7,198,715 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,411,550 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 157,451 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 4,865,930 என்பதும் குறிப்பிடத்தக்கது.