திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (18:26 IST)

உச்சகட்ட போர், பதற்றம்..! 48 மணி நேரத்தில் 350 பேர் பலி..!!

war
ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் கடந்த 48 மணி நேரத்தில் 350 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
 
இஸ்ரேல் ஹமாஸ் இடையே உச்சகட்ட போர் நீடித்து வருகிறது. போரில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்  தெற்கு காசா பகுதியில் அமைந்துள்ள கான் யூனிஸ் என்ற இடத்தில் பயங்கர தாக்குதல் நடைபெற்றது.
 
அங்கு கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350 பாலஸ்தீனர்களை இஸ்ரேலிய படைகள் கொன்று குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவின் தெருக்களில் சிதறிக் கிடக்கும் உடல்களை மருத்துவக் குழுக்களால் அடையாளம் காண முடியவில்லை.

 
இறந்தவர்களின் உடல்களை கான் யூனிஸ் உள்ள கல்லறைக்கு கொண்டு செல்ல முடியாததால், காசா நகரின் நாசர் மருத்துவமனையின் முற்றத்திலேயே புதைக்கின்றனர்.