திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (17:21 IST)

25 வயது பெண் போதையில் செய்த விபரீதம் !! ரயில்வே தண்டவாளத்தில் அதிர்ச்சி... வைரல் வீடியோ

ஸ்பெயின் நாட்டிலுள்ள மாலகா என்ற பகுதியில் ரயில்வே தண்டவாளம் உள்ளது. இப்பகுதியில் ஒரு கார் ஒன்று வேகமான வந்து ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்டது

அதனைப் பார்த்த மக்கள் சற்று அதிர்ச்சி அடைந்து உடனே ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதேநேரம் இக்காட்சியை அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் பார்த்த மெட்ரோ ரயில் நிர்வாகத்தினருன், போலீஸாரும்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்டிருந்த காரை மீட்டனர்.

அப்போது, காருக்குள் இருந்து 25 வயது மதிக்கத்தக பெண் ஒருவர் போதையில் இருந்துள்ளதாகத் தெரிகிறது.  பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் என்று அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் மதுபோதையில் கார் ஓட்டி வந்தது கண்டுபிடிக்க்கப்பட்டது.

எனவே அவர் மீது போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சி வைரலாகப் பரவி வருகிறது.