காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்.... சிறுமி எடுத்த முடிவால் போலீஸார் அதிர்ச்சி
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன் காதலுக்குத் தாய் சம்மதிக்காததால் விபரீத முடிவை மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்திச் சேர்ந்த சிறுமி ஒருவர் இந்தூரில் உள்ள பர்தேசிபுரா என்ற பகுதியில் உள்ள ஒரு உயரமான விளம்பரப்பலகையின் மீது ஏறிநின்றுகொண்டு, தான் ஒரு நபரைக் காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறி அடம்பிடித்தார். பின்னர் போலீசார் சிறுமியிடம் பேசி அவரைச் சமாதானம் செய்து கீழே இறக்கி சமாதானம் செய்தனர்.
சிறுமி காதலிப்பதாகக் கூறிய நபர் ஒரு ஹோட்டலில் வேலை செய்வதாகவும், அதனால்தான அவரது தாய் அவர்களின் திருமணத்துக்குச் சம்மதம் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.