வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 9 ஜனவரி 2023 (09:23 IST)

ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் பலி: காரணம் தெரியாமல் அதிர்ச்சியில் அரசு!

dead
ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் சீனாவில் பலியாகி உள்ள நிலையில் அவர்கள் என்ன காரணத்தினால் இறந்தார்கள் என்பது தெரியாமல் சீன அரசு அதிர்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் கடந்த ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
இந்த 20 விஞ்ஞானிகளில் ஒரு விஞ்ஞானியின் உயிரிழப்பிற்கு கூட குறிப்பிட்ட காரணம் எதுவும் வெளியாகவில்லை. ஒரு மாதத்திற்குள் இவ்வளவு பிரபலங்கள் உயிரிழந்திருப்பது சீனாவில் முதல் முறை என்பதால் அதற்கான காரணத்தை அறிய அந்நாட்டு அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.
 
 ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் உயிரிழந்ததற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடந்து கொண்டிருக்கின்றன.
 
Edited by Siva