இத்தாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து - 2 பேர் பலி
இத்தாலியில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் டுரின் மாகாணத்தில் நேற்று இரவு 10.30 மணிக்கு பயணிகள் ரயில், டுரிலிருந்து இவ்ரியாவிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தில் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பயணிகள் அலறியடியடித்துக் கொண்டு ரயிலில் இருந்து வெளியேறினர். 2 ரயில் பெட்டிகள் தடம்புரண்டது. இந்த கோர விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.