புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (14:16 IST)

காட்டு காட்டிய ஹகிபிஸ் புயல்: 11 பேர் பலி, 99 பேர் காயம்!

ஜப்பான் சூறாவளியில் 11 பேர் பலியாகியுள்ளதாகவும், 99 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
1960-ல் ஜப்பானில் மிகப்பெரும் சூறாவளி ஒன்று தாக்கியதில்  பலர் உயிரிழந்தனர். ஜப்பானின் பல பகுதிகள் தரைமட்டமாகின. ஜப்பான் ஒரு மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. சுமார் 60 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதே அளவுக்கு மிகப்பெரிய சூறாவளி ஒன்று ஜப்பானை தாக்கியுள்ளது.
 
ஜப்பானை சூறாவளி வந்தடையும் முன்னரே வானம் முழுவதும் பிங்க் நிறத்தில் மாறிவிட்டது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கினார்கள். இதனைதொடர்ந்து சற்று நேரத்தில் தனது விஸ்வரூபத்தை காட்டிய சூறாவளி மிகப்பெரும் ட்ரக்குகளை கூட விளையாட்டு பொம்மைகளை போல தூக்கி வீசியது. கட்டிடங்கள், டவர்கள் சரிந்து விழுந்தன.
இந்நிலையில் இந்த புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், இதுவரை 11 பேர் பலியாகியுள்ளதாகவும், 99 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், பலரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
மக்களை மீட்கும் பணியில் ஜப்பான் ராணுவம் ஈடுப்பட்டுள்ளது. சூறாவளி ஏற்படும் என தெரிந்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை எடவடிக்கையால் ஏற்கனவே 70 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.