ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (11:10 IST)

ஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்!!

60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலைகுலைந்து போயிருக்கும் ஜப்பானின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. 
 
1960ல் ஜப்பானில் மிகப்பெரும் சூறாவளி ஒன்று தாக்கியது. இதனால் பலர் உயிரிழந்தனர். ஜப்பானின் பல பகுதிகள் தரைமட்டமாகின. ஜப்பான் ஒரு மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. 
சுமார் 60 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதே அளவுக்கு மிகப்பெரிய சூறாவளி ஒன்று ஜப்பானை தாக்கியுள்ளது. ஆம், தனது விஸ்வரூபத்தை காட்டிய சூறாவளி மிகப்பெரும் ட்ரக்குகளை கூட விளையாட்டு பொம்மைகளை போல தூக்கி வீசியது. கட்டிடங்கள், டவர்கள் சரிந்து விழுந்தன.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், உடமைகளை இழந்து தவித்து வரும் அந்நாட்டு மக்களை நினைக்கும் போது பலருக்கு இது வேதனை ஏற்படுத்தியுள்ளது என பதிவிட்டு வருகின்றன.