வெள்ளி, 25 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2024 (10:09 IST)

2 ஆண்டுகளில் 1 கோடி மக்கள் தொகை குறைவு! முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடு?

Ukraine.

உலகம் முழுவதும் மக்கள் தொகை பெருக்கம் பல நாடுகளில் பிரச்சினையாக உள்ள நிலையில் ஒரு நாட்டில் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது.

 

 

உலகம் முழுவதும் பல நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் பெரும் சிக்கலாக உள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்பட்டு வரும் சிக்கல்களை சமாளிக்க ஒரு குடும்பத்தில் இவ்வளவு குழந்தைகள்தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால் ஒரு நாட்டில் நாளுக்கு நாள் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது என்றால் நம்ப முடிகிறதா?

 

உக்ரைன் தான் அந்த நாடு. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் உக்ரைனில் மக்கள் தொகை சராசரி விகிதம், பிறப்பு விகிதம் சமமாக இருந்து வந்துள்ளது. ஆனால் ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பிறகு அங்கு மக்கள் தொகை கணிசமாக குறைந்து விட்டது.

 

லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி பிற நாடுகளில் தஞ்சம் அடைந்தது, ரஷ்ய படையால் மக்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உக்ரைன் மக்கள் தொகை வெகுவாக குறைந்து விட்டது. மேலும் மீதமுள்ள இளைஞர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்லவே முயற்சித்து வருவதால், உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் முதியவர்கள் மட்டுமே வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

கடந்த 2 ஆண்டுகளில் 1 கோடி பேரை இழந்துள்ள உக்ரைன் உலகளவில் மக்கள் தொகை வேகமாக குறைந்து வரும் நாடாக உள்ளது.

 

Edit by Prasanth.K