வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2024 (14:12 IST)

தைவான் எல்லைக்குள் புகுந்த சீன போர் விமானங்கள்.. இன்னொரு போரா?

ஏற்கனவே கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது. அதேபோல், இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் சமீபத்தில் தொடங்கி உக்கிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தைவான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் நுழைந்ததாக செய்தி வெளியாகியுள்ளதால், இன்னொரு போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீன விமானப்படையின் 20 போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளதாக தைவான் பாதுகாப்புத்துறை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது. 20 சீன போர் விமானங்கள்  மற்றும் 8 போர் கப்பல்கள் இன்று அதிகாலை 6 மணியளவில் தைவான் அருகே செயல்பட்டதாகவும், தைவான் சீனாவை குற்றம்சாட்டி உள்ளது. மேலும், தைவான் சூழலை கண்காணித்து வருவதாகவும் சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தைவான் நாட்டிலிருந்து பிரிந்த ஒரு மாகாணத்தை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் இணைத்துக்கொள்ள விரும்புகிறது. இதனால் தைவானுக்கும் சீனாவுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தைவான் அதிபர் பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறார் என்றும், தைவான் அதிபர் பிரிவினைவாத  நடவடிக்கைகள் எடுக்கிறார் என்றும் சீனா குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் தைவான் இதனை மறுத்துள்ளது.


Edited by Mahendran