வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By VM
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (17:39 IST)

தமிழில் ‘ 'ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன் 3': இந்தியாவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன் 3' மார்ச் 21ம் தேதி இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது.


 
'ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன்'  படத்தின் இரண்டாம் பாகம் கடந்த  2014ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் மூன்றாம் பாகமான 
 
How to Train Your Dragon: The Hidden World  கடந்த ஜனவரி 3ம்தேதி ஆஸ்திரேலியாவில் வெளியானது. அதன் பின்னர் பிப்வரி 22ம் தேதி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்பட 
 
பல்வேறு நாடுகளில் வெளியானது.   ஜாய் ப்ரூசெல், அமெரிக்கா பெர்ரரா, கேட் பிளன்செட்,கிரிக் பெர்குசன் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்கள்  வாய்ஸ் கொடுத்துள்ளனர். இந்த 'ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன் 3 படத்துக்கு உலக நாடுகளில் பெரும் வரவேற்பை கிடைத்துள்ளது. இதுவரை 378 .5 மில்லியன் டாலர் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது.  டேன் டேப்ளாசிஸ் இயக்கியுள்ள இப்படத்தினை டிரீம் ஒர்க்ஸ் அனிமேசன் தயாரித்துள்ளது. 
 
இப்படம் வரும் மார்ச் 21ம் தேதி இந்தியாவில் வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் 'ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன் வெளியாகிறது.
 
வீடியோ லிங்க்